"தமிழ் வாழ்க, தமிழ் வளர்க" - ரிப்பன் மாளிகையில் மீண்டும் பெயர் பலகை

சென்னை மாநகராட்சி ஆணையர் அலுவலகமான ரிப்பன் மாளிகையில், கடந்த 2006-ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சி காலத்தில், தமிழ் வாழ்க, தமிழ் வளர்க என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்ட பெயர் பலகை வைக்கப்பட்டது.
x
கடந்த ஆண்டுகளில், ரிப்பன் மாளிகை கட்டடத்தில் நடைபெற்ற பராமரிப்பு பணியின் போது, இந்த பலகை அகற்றப்பட்டது. இந்த நிலையில் தமிழ் வாழ்க, தமிழ் வளர்க என்ற பெயர் பலகை மீண்டும் ரிப்பன் மாளிகையில் நிறுவப்பட்டு உள்ளது. இந்த பெயர் பலகை வண்ண விளக்குகளால் இரவில் ஜொலிக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்