கொரோனா பணியில் அங்கன்வாடி ஊழியர்கள் - பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் தங்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என, அங்கன்வாடி குழந்தை பராமரிப்பு பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
x
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு பணிகளில் அங்கன்வாடி குழந்தை பராமரிப்பு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, தஞ்சாவூரில் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள், தங்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா பணியில் ஈடுபடும் தங்களுக்கு தொற்று ஏற்பட்டு உயிரிழக்கும் சூழல் உருவாகும் என்பதால், தங்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவித்து சலுகை வழங்க வேண்டும் என, வலியுறுத்தியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்