45 ஆண்டுகளுக்கு பின் தூர்வாரப்படும் முத்தப்பன் வாய்க்கால் - அரசுக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள்

மயிலாடுதுறை அருகே உள்ள முத்தப்பன் வாய்க்கால் 45 ஆண்டுகளுக்கு பிறகு தூர்வாரப்படுவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
x
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆறுகள், வாய்கால்கள் மற்றும் வடிகால்கள், முதலமைச்சரின் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின்கீழ்,  சுமார் 431 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரப்படுகிறது. அத்துடன், மேட்டூரில் திறக்கப்படும் காவிரி நீர் வந்தடைவதற்கு முன்னதாக, பணிகளை முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில், முத்தப்பன் வாய்க்காலும் 45 ஆண்டுகளுக்குப் பிறகு தூர்வாரப்படுவதால், அப்பகுதி விவசாயிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்