பட்டா மாறுதலுக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் - போலீசாரிடம் சிக்கிய கிராம நிர்வாக அலுவலர்

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர், கையும் களவுமாக பிடிபட்டார்.
பட்டா மாறுதலுக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் - போலீசாரிடம் சிக்கிய கிராம நிர்வாக அலுவலர்
x
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர், கையும் களவுமாக பிடிபட்டார். காட்பாடி அடுத்த பொன்னை பஜார் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் பட்டா மாறுதல் தொடர்பாக முறையிட்ட போது, பொன்னை கிராம நிர்வாக அலுவலர் கவிதா 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரின் பேரில், ரசாயனம் தடவிய பணத்தை வாங்கிய போது, கவிதாவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்