மணிகண்டனை கைது செய்ய இடைக்கால தடை

நடிகை சாந்தினி கொடுத்த புகார் தொடர்பாக முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
மணிகண்டனை கைது செய்ய இடைக்கால தடை
x
மணிகண்டனை கைது செய்ய இடைக்கால தடை  

நடிகை சாந்தினி கொடுத்த புகார் தொடர்பாக முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.நடிகை சாந்தினி அளித்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனிடையே முன் ஜாமின் கோரி மணிகண்டன் தாக்கல் செய்த மனு, நீதிபதி ஆர். சுப்ரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது நடிகை சாந்தினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  மணிகண்டனுக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என இடையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளதாக வாதிட்டார்.மணிகண்டன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்றச்சாட்டுகள் பொய்யானது என்றும், நடிகையின் ஆட்சேபணை மனு கிடைத்துள்ளதாகவும், வழக்கு முடியும் வரை கைது செய்யக்கூடாது என வாதிட்டார்.காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதாலும், இடைக்கால உத்தரவு வழங்க கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.இதையடுத்து, முன்னாள் அமைச்சருக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என்ற நடிகையின் மனுவை விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி,வழக்கை ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளிவைத்ததோடு அதுவரை மணிகண்டனை கைது செய்யக்கூடாது என இடைக்கால உத்தரவும் பிறப்பித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்