குலத்தொழிலை செய்ய வற்புறுத்தல்;பாதிக்கப்பட்டவர் புகார் - பெண் மீது தாக்குதல்

மயிலாடுதுறை அருகே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் குலத்தொழிலை செய்ய கட்டாயப்படுத்துவதாக ஊர் பஞ்சாயத்தினர் மீது பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
குலத்தொழிலை செய்ய வற்புறுத்தல்;பாதிக்கப்பட்டவர் புகார் - பெண் மீது தாக்குதல்
x
மயிலாடுதுறை அருகே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் குலத்தொழிலை செய்ய கட்டாயப்படுத்துவதாக ஊர் பஞ்சாயத்தினர் மீது பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

மயிலாடுதுறை அருகே உள்ள மல்லியம் பகுதியை சேர்ந்தவர் பக்கிரிசாமி. கணவருடனான கருத்து வேறுபாடு காரணமாக, இவரது மகள் அம்பிகா குழந்தைகளுடன் பக்கிரிசாமி வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில்,  பக்கிரிசாமி தனது சொத்துக்களை மகன் முரளி மற்றும் மகள் அம்பிகா ஆகியோருக்கு சமமாக எழுதிவைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முரளியின் மாமனாரும், கிராம பஞ்சாயத்து தலைவருமான ராமச்சந்திரன் என்பவர், அம்பிகாவிற்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். மேலும், அம்பிகாவின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் ஜோதிடம் பார்க்கும் குலத்தொழிலுக்கு அனுப்ப வேண்டுமென ஊர் பஞ்சாயத்து மூலம் ராஜேந்திரன் கட்டாயப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பபட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் தற்போது அம்பிகாவை தாக்கிய ராஜேந்திரனை காவல்துறையினர் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்