முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த தினம் - நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
x
தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதையொட்டி சென்னை மெரினாவுக்கு வருகை தந்த அவர், அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர், கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், திமுக எம்.பி. கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் முக்கிய நிர்வாகிகளும் மலர்தூவி மரியாதை மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து மாவட்டம் தோறும் தலா ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திட்டத்தை தொடங்கும் விதமாக கருணாநிதி நினைவிடத்தில் மரக்கன்று ஒன்றை அவர் நட்டுவைத்தார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் நடைபெற்ற விழாவில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை அவர் வழங்கினார். இந்த நிகழ்வில் அமைச்சர் சேகர் பாபு, தி.மு.க எம்.பி டி.ஆர். பாலு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.Next Story

மேலும் செய்திகள்