நாளை கருணாநிதியின் 97-வது பிறந்தநாள்- நலத்திட்டங்களை தொடங்கி வைக்கும் முதல்வர்

கருணாநிதியின் 97-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, நாளை கொரோனா 2-ம் கட்ட நிவாரண நிதி,உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
x
தலைமை செயலகத்தில் இருந்து மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பு, 
2-வது கட்டமாக கொரோனா நிவாரண நிதி 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அறநிலையத்துறையில் மாதச் சம்பளமின்றி பணிபுரியும் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு 4 ஆயிரம் வழங்குகிறார்.கொரோனாவால் இறந்த பத்திரிக்கையாளர் குடும்பத்தினருக்கு ரூபாய் 10 லட்சம், மருத்துவத்துறை, காவலர், நீதிபதிகள் ஆகியோரின் குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் வழங்கும் திட்டங்களை முதலமைச்சர் துவக்கி வைக்க உள்ளார்.
அதுமட்டுமின்றி, உங்கள் தொகுதியில் முதலமைச்சர்  திட்ட பயனாளிகள் 10 பேருக்கு அரசு பயன்களை முதல்வர் வழங்குவதோடு,திருநங்கையர் கட்டணமில்லாமல் பேருந்தில் பயணிக்க அனுமதி, திருநங்கையருக்கு 2 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டங்களையும் துவக்கி வைக்கவுள்ளார்.Next Story

மேலும் செய்திகள்