தடுப்பூசி குறித்து மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

தமிழகத்திற்கு போதிய அளவு தடுப்பூசி வழங்கக்கோரி மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
x
தமிழகத்திற்கு போதிய அளவு தடுப்பூசி வழங்கக்கோரி மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தயாரிப்பு தொழிற்சாலையை இயக்க அனுமதிக்க வேண்டுமென கடந்த வாரம் பிரதமருக்கு தான் கடிதம் எழுதியதாகவும், 

தங்களிடமும் தமிழக பிரதிநிதிகள் நேரடியாக கோரிக்கை வைத்ததாகவும் தனது கடிதத்தில் முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விவகாரத்தில் மேலும் தாமதிக்காமல் தடுப்பூசி தொழிற்சாலையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென தனது கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக அரசின் முயற்சியால் தடுப்பூசி தட்டுப்பாடு பெருமளவு தவிர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள முதல்வர், மக்கள் தொகை மற்றும் பாதிப்பு எண்ணிக்கைக்கு ஏற்றவாறு தடுப்பூசி வழங்கப்படவில்லை என கடிதத்தில் கூறியுள்ளார்.

தற்போது தமிழகத்திற்கு கூடுதலாக 40 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டிருப்பதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின்,

எனினும் இந்த ஒதுக்கீடு தமிழகத்தின் தடுப்பூசி தேவையை பூர்த்தி செய்யாது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே தமிழகத்திற்கு மேலும் அதிக தடுப்பூசிகள் ஒதுக்க வேண்டுமெனவும், ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளை இந்த வாரத்திலேயே அளிக்க வேண்டுமென தனது கடிதத்தில் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்