கோவைக்கு கூடுதல் தடுப்பூசிகள் ஒதுக்கீடு

மத்திய அரசு தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு மேலும் 4 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவை மாவட்ட வாரியாக பிரித்து வழங்கப்பட்டுள்ளன.
x
மத்திய அரசு தொகுப்பிலிருந்து 45-வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு செலுத்துவதற்காக, தமிழகத்திற்கு மேலும் 4 லட்சத்து 95 ஆயிரத்து 570 தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதில் சென்னைக்கு 54 ஆயிரத்து 570 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 10 ஆயிரம் கோவாக்ஸின் தடுப்பூசிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 

சென்னைக்கு அடுத்தபடியாக கோவைக்கு 40 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 8 ஆயிரம் கோவாக்ஸின் தடுப்பூசிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 

கோவைக்கு தடுப்பூசி குறைவாக ஒதுக்கீடு செய்யப்படுவதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், சென்னைக்கு அடுத்து கோவைக்கு அதிகளவில் தடுப்பூசி வழங்கப்பட்டிருக்கிறது. 

இதேபோல் செங்கல்பட்டு, மதுரை, திருச்சி, தஞ்சை, கன்னியாகுமரி உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு தலா 10 ஆயிரத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் பிரித்து வழங்கப்பட்டுள்ளன.

மாவட்ட வாரியான நோய் பரவல் மற்றும் பயன்பாட்டு அடிப்படையில் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மத்திய அரசு தொகுப்பிலிருந்து, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கென தமிழகத்திற்கு இதுவரை 87.44  லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மேலும், தமிழகத்தில் அனைத்து வயதினரையும் சேர்த்து இதுவரை 90.31 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்