தமிழகத்தில் +2 தேர்வை நடத்த வேண்டும் - அரசுக்கு பிரின்ஸ் கஜேந்திர பாபு கோரிக்கை

தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் வந்த பிறகு12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத்துப் பூர்வமாக நடத்த வேண்டும் என பிரின்ஸ் கஜேந்திர பாபு கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் +2 தேர்வை நடத்த வேண்டும் - அரசுக்கு பிரின்ஸ் கஜேந்திர பாபு கோரிக்கை
x
தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் வந்த பிறகு12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத்துப் பூர்வமாக நடத்த வேண்டும் என பிரின்ஸ் கஜேந்திர பாபு கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவு, மாணவர்களுக்கு எந்த நன்மையும் விளைவிக்காது என்றும், இதனால் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் என விமர்சித்து உள்ளார். மேலும், தேசிய நுழைவு தேர்வுகளை ரத்து செய்யாமல் பொதுத்தேர்வை மட்டும் ரத்து செய்வதால் மாணவர்களுக்கு எந்த பயனும் இல்லை என அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்