பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அதிரடி

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மேலும் மூன்று பள்ளிகளுக்கு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அதிரடி
x
சென்னை கே.கே. நகர் பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், மாணவிகளிடம் அத்துமீறியதாக புகார்கள் வெளியாகின. இந்த  சம்பவத்தில் ராஜகோபாலன் கைது செய்யப்பட்ட நிலையில் மகிரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன் மீதும் சர்ச்சைகள் எழுந்தன. அவரை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்த நிலையில் அடுத்தடுத்த பள்ளிகளும் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கின. மாணவிகள் அளித்த புகாரின் பேரில் சென்னை அடையாறில் உள்ள பள்ளி, கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி மற்றும் நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளி என மொத்தம் 3 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் ஆணையம் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்