"5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்பசலனம் மற்றும் உள் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
x
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு தினங்களுக்கு 15 மாவட்டங்களில் வெப்ப நிலையானது 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி மதுரை, திருச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, கடலூர், மற்றும் புதுவை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் வெப்பநிலை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்