ஊரடங்கு சமயத்தில் மலையேற்றம் - 6 இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு

கொடைக்கானலில் ஊரடங்கு சமயத்தில் மலையேற்றம் சென்ற இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கு சமயத்தில் மலையேற்றம் - 6 இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு
x
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட மலைப்பகுதிகளுக்கு செல்ல, சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், கொடைக்கானலில் உள்ள வடகவுஞ்சி ஊராட்சிக்கு உட்பட்ட செம்பிரான்குளம் கிராமத்தின் மலை மீது மலையேற்றம் சென்றுள்ளனர். மேலும், அப்போது எடுத்த வீடியோவை அவர்கள் சமூக வலைதளத்தில் பதிவேற்றி உள்ளனர். இதுதொடர்பாக வடகவுஞ்சி கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில், திண்டுக்கல் மற்றும் கொடைக்கானலைச் சேர்ந்த 6 இளைஞர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டம், நோய் தொற்று பரப்புதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் பயன்படுத்திய வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், ஊரடங்கு சமயத்தில் பொய்க் காரணங்களைக் கூறி கொடைக்கானலுக்கு வருவோர் மீது, பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என காவல்துறை சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்