ஜூன் மாத ரேஷன் பொருட்கள் : "வீடுகளுக்கு வந்து டோக்கன் வழங்கப்படும்"- தமிழக அரசு அறிவிப்பு

ஜூன் மாத ரேஷன் பொருட்களை பெற டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஜூன் மாத ரேஷன் பொருட்கள் : வீடுகளுக்கு வந்து டோக்கன் வழங்கப்படும்- தமிழக அரசு அறிவிப்பு
x
கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மக்கள் கூட்டம் சேராமல் தடுக்க, ஜூன் மாத ரேஷன் பொருட்களை வாங்க டோக்கன் விநியோகிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த டோக்கன்கள் இன்று முதல் 4 நாட்களுக்கு, வீடுகளுக்கு சென்று வழங்கப்பட உள்ளது. குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு சென்று நியாய விலை கடை ஊழியர்கள் டோக்கன்களை வழங்குவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது. டோக்கன்களின் படி வரும் 5ஆம் தேதி முதல் பொருட்களை சென்று பெற்று கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், நிர்வாக காரணங்களினால் துவரம் பருப்பு மட்டும் வரும் 7ஆம் முதலே நியாய விலைக்கடைகளில் விநியோகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

"முதல் கட்ட நிவாரணம் - ஜூனிலும் பெறலாம்"

முதல் கட்ட கொரோனா நிவாரண தொகை 
பெறாதவர்கள், ரேஷன் கடைகளில் ஜூன் 
மாதத்திலும் பெற்று கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுவரை 2 கோடியே 9 லட்சம் குடும்ப அட்டைதாரர்களில்,  98.4 சதவீதம் பேருக்கு நிவாரண உதவி தொகை வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், சொந்த காரணங்களுக்காக ரேஷன் கடைகளுக்கு செல்ல முடியாதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கும் நோக்கில் ஜூனிலும் முதல் கட்ட நிவாரண தொகையை பெறலாம் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்