பவானிசாகர் அணையின் நீர்மட்டம் அதிகரிப்பு... விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

கடந்த ஆண்டின் கோடை காலத்தை காட்டிலும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 10 அடி உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் அதிகரிப்பு... விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
x
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் அதிகரிப்பு... விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி


கடந்த ஆண்டின் கோடை காலத்தை காட்டிலும்  பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 10 அடி உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போதைய நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 89 அடியாகவும், நீர் இருப்பு 21 டிஎம்சி ஆகவும் உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 79 அடியாக இருந்தது,. கடந்த ஆண்டின் கோடை காலத்தை காட்டிலும்  அணையின் நீர்மட்டம் 10 அடி அதிகமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யும் என்பதால் அணை வேகமாக நிரம்பி முழு கொள்ளளவான 105 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரத்து 994 கன அடியாக உள்ள நிலையில், பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக ஆயிரத்து 50 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்