பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு - வாகன ஓட்டிகள் கலக்கம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
x
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், தமிழகத்தில் புதிய உச்சமாக பெட்ரோல் விலை 96 ரூபாயை நெருங்கி உள்ளது.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 95 ரூபாய் 51 காசுகளாக அதிகரித்து உள்ளது. இதேபோல், டீசல் 89 ரூபாய் 65 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், மும்பையில் பெட்ரோல் விலை, 100 ரூபாயை தாண்டி சதம் அடித்து உள்ளது. 

அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய் 19 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் 92 ரூபாய் 17 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

தலைநகர் டெல்லியிலும், பெட்ரோல் விலை உயர்ந்து உள்ளது. டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 93 ரூபாய் 94 காசுகளுக்கும், டீசல் லிட்டர், 91 ரூபாய் 87 காசுகளுக்கும் விற்பனையாகி வருகிறது. 

இதேபோல், கொல்கத்தாவிலும் பெட்ரோல் விலை அதிகரித்து உள்ளது. அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் 93 ரூபாய் 97 காசுகளுக்கும், டீசல் 87 ரூபாய் 74 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

சென்னை, மும்பை உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில், பெட்ரோல் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருவது, வாகன ஓட்டிகளை பதற்றத்துடன் கவலை அடையச் செய்து உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்