ராமேஸ்வரம் பாம்பன் பகுதியில் யாஸ் புயல் காரணமாக கடல் சீற்றம் - உள்வாங்கிய கடல்நீர்

ராமேஸ்வரம் பாம்பன் பகுதியில், யாஸ் புயல் காரணமாக கடல்நீர் உள்வாங்கியதால், படகுகள் தரைதட்டி நிற்கின்றன. யாஸ் புயல் காரணமாக நேற்று மாலை பாம்பன், மண்டபம் பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்பட்டது.
x
ராமேஸ்வரம் பாம்பன் பகுதியில், யாஸ் புயல் காரணமாக கடல்நீர் உள்வாங்கியதால், படகுகள் தரைதட்டி நிற்கின்றன. யாஸ் புயல் காரணமாக நேற்று மாலை பாம்பன், மண்டபம் பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இந்நிலையில், இன்று பாம்பன் பகுதிகளில் கடல்நீர் சுமார் அரை கிலோமீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியது. இதனால், பாம்பன் சின்னப்பாலம் துறைமுகத்தில் நாட்டுப்படகுகளும், ஆழ்கடல் படகுகளும் தரைத்தட்டி நிற்கின்றன. இப்பகுதியில் ஆழ்கடல் படகுகளை நிறுத்த ஏதுவாக துறைமுக வசதி இல்லாததால், தொடர்ந்து இழப்பைச் சந்தித்து வருவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்