ஆசிரியர் பாலியல் தொந்தரவு - பள்ளி முதல்வரிடம் 2-வது நாளாக விசாரணை

பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் பலமுறை புகார் அளித்தும் கண்டுகொள்ளாதது ஏன்? என பள்ளியின் முதல்வர், நிர்வாகியிடம் போலீசார் சரமாரியான கேள்விகளை முன்வைத்தனர்.
x
ஆசிரியர் பாலியல் தொந்தரவு - பள்ளி முதல்வரிடம் 2-வது நாளாக விசாரணை 

பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் பலமுறை புகார் அளித்தும் கண்டுகொள்ளாதது ஏன்? என பள்ளியின் முதல்வர், நிர்வாகியிடம் போலீசார் சரமாரியான கேள்விகளை முன்வைத்தனர்.சென்னை கேகேநகர் பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்த ராஜகோபாலன் தன் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கைது செய்யப்பட்டார். ஆனால் இதற்கு முன்பாக பலமுறை அவர் மீது புகார் அளிக்கப்பட்டும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனிடையே நேற்று அசோக் நகர் போலீசார், பள்ளியின் முதல்வர் கீதா கோவிந்தராஜன் மற்றும் பள்ளி நிர்வாகி ஷீலா ராஜேந்திரா ஆகியோரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது 30க்கும் மேற்பட்ட மாணவிகள் பலமுறை புகார் தந்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என கேள்வி எழுப்பினர். இதனிடையே 2வது நாளாக இன்று மீண்டும் அவர்கள் 2 பேரும் அசோக் நகர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடைபெற்று வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்