7 பேரை விடுவிக்கும் விவகாரம் : "தமிழக அரசின் கோரிக்கையை நிராகரியுங்க.." - சுப்பிரமணிய சுவாமி கடிதம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக்கோரும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் பரிந்துரையை நிராகரிக்க வேண்டும்
7 பேரை விடுவிக்கும் விவகாரம் : தமிழக அரசின் கோரிக்கையை நிராகரியுங்க.. - சுப்பிரமணிய சுவாமி கடிதம்
x
7 பேரை விடுவிக்கும் விவகாரம் : "தமிழக அரசின் கோரிக்கையை நிராகரியுங்க.." - சுப்பிரமணிய சுவாமி கடிதம் 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை   விடுவிக்கக்கோரும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் பரிந்துரையை நிராகரிக்க வேண்டும் என பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்,இந்த குற்றவாளிகள் வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே காலத்தை கழிப்பதை உறுதி செய்து உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி அதில் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்து கொள்ளாது என்ற ஒரு எச்சரிக்கையாக குடியரசு தலைவரின் முடிவு அமைய வேண்டும்  என அதில் சுப்பிரமணிய சுவாமி கோரியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்