12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விவகாரம் - தமிழக அரசின் நிலைப்பாடு-இன்று அறிக்கை

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழக அரசின் நிலைப்பாடு குறித்த அறிக்கை இன்று மாலைக்குள் மத்திய கல்வி அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
x
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விவகாரம் - தமிழக அரசின் நிலைப்பாடு-இன்று அறிக்கை  

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழக அரசின் நிலைப்பாடு குறித்த அறிக்கை இன்று மாலைக்குள் மத்திய கல்வி அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட இருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. மாநிலங்களில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வை எந்த வகையில் நடத்துவது  என்பது குறித்த சில ஆலோசனைகளை மத்திய அரசு , மாநில கல்வி அமைச்சர்கள் உடனான கூட்டத்தின்போது வழங்கியிருக்கிறது. இது குறித்து ஆலோசித்து இன்று மாலைக்குள் அறிக்கை அனுப்பும்படி மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி தமிழக அரசின் நிலைப்பாடு குறித்த அறிக்கை இன்று மாலைக்குள் மத்திய கல்வி அமைச்சகத்திற்கு அனுப்பப்பட உள்ளது. இன்று பிற்பகலில் முதல்வருடன் , பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சந்தித்து  ஆலோசனை நடத்திய பிறகு அரசின் நிலைப்பாடு குறித்த கருத்துக்கள் இறுதி செய்யப்பட்டு மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட உள்ளது

 

Next Story

மேலும் செய்திகள்