"6000 வாகனங்களில் நேற்று காய்கறி விற்பனை" - வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

ஊரடங்கிலும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி விநியோகம் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
x
"6000 வாகனங்களில் நேற்று காய்கறி விற்பனை" - வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

ஊரடங்கிலும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி விநியோகம் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற வேளாண் அமைச்சர், அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் இந்த உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார். ஆய்வு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ஊரடங்கின்போது விவசாயிகளிடம் அரசு நேரடியாக காய்கறிகளை கொள்முதல் செய்து விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார். மேலும், தமிழகம் முழுவதும் 13 ஆயிரம் வாகனங்களில், 6 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் காய்கறிகள், பழங்கள் இன்று விற்பனைக்கு அனுப்பபட்டுள்ளதாக அவர் கூறினார். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில், காவல்துறை மற்றும் தன்னார்வலர்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்படும் எனவும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்