தமிழகத்தில் அதிகளவு கொரோனா பரிசோதனை - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

தமிழகத்தில் அதிகளவு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதால் கூடுதலாக ஆர்.டி. பி.சி.ஆர் கிட்களை வாங்குவதற்காக 50 கோடி ரூபாயை இரண்டாவது கட்டமாக ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் அதிகளவு கொரோனா பரிசோதனை - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு
x
தமிழகத்தில் அதிகளவு கொரோனா பரிசோதனை - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு  

தமிழகத்தில் அதிகளவு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதால்  கூடுதலாக ஆர்.டி. பி.சி.ஆர் கிட்களை வாங்குவதற்காக 50 கோடி ரூபாயை இரண்டாவது கட்டமாக ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதியாக இதுவரை 181 கோடி ரூபாய்  பெறப்பட்டுள்ளதாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு காரணமாக நன்கொடையாளர்கள் இனி தம்மிடம் நேரில் நிதி அளிப்பதை தவிர்த்து முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இணைய வழியில் நன்கொடைகளை தொடர்ந்து அளிக்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்