இறுதி சடங்கு - வழிகாட்டு நெறிமுறைகள் : தேசிய மனித உரிமை ஆணையம் அறிவுறுத்தல்

கொரோனா பாதிக்கப்பட்டு இறப்பவரின் சடலத்தை கண்ணியமாக அடக்கம் செய்வது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளது
இறுதி சடங்கு - வழிகாட்டு நெறிமுறைகள் : தேசிய மனித உரிமை ஆணையம் அறிவுறுத்தல்
x
அதில், சடலங்கள் வரிசையாக  காத்திருப்பதை தடுக்க தற்காலிக தகன மேடைகளை உடனடியாக அமைக்க வேண்டும்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரியூட்டு மேடை, இடுகாட்டில் பணிபுரியும் ஊழியகளுக்கு சடலங்களை கையாள்வது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சடலங்களை தொடாமல் இருக்கும் மதசடங்குகளை நடத்த அனுமதி அளிக்கலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத நூல்களில் இருந்து வசனம் வாசிக்கவும் , புனித நீர் தெளிக்கவும் அனுமதிக்கலாம் என்றும், இறந்தவரின் உறவினர்கள் இறுதி சடங்கு செய்ய முடியாதபோது, மத, கலாச்சார அம்சங்களை கருத்தில் கொண்டு  உள்ளாட்சி நிர்வாகங்கள் அதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இறந்தவரின் கண்ணியத்தை மீறும் வகையில் மொத்தமாக சடலங்களை அடக்கம் செய்யவோ எரியூட்டல் செய்யவோ கூடாது என்றும், சடலங்களை எடுத்து செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் அதிக கட்டணம் வசூலிக்காமலிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. மேலும்,  இடுகாட்டில், மின் மயானத்தில் பணி புரிபவர்களுக்கு உரிய ஊதியம் வழங்க வேண்டும் என்றும், அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டு அறிவுரைகளை தேசிய மனித உரிமை ஆணையம் வழங்கியுள்ளது. இந்த நிலையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழங்கியுள்ள இந்த  பரிந்துரைகளை அமல்படுத்தவும், இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் 4 வாரங்களுக்குள் மத்திய மாநில அரசுகள் ஆணையத்துக்கு பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்