சீமான் தந்தை உடல்நலக்குறைவால் காலமானார்

சீமான் தந்தை உடல்நலக்குறைவால் காலமானார்
x
 சீமான் தந்தை உடல்நலக்குறைவால் காலமானார் - தந்தையின் உடலுக்கு சீமான் கண்ணீர் அஞ்சலிநாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார். அவரது இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரில் நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்டம் அரணையூர் கிராமத்தில் வசித்து வந்த 80 வயதான செந்தமிழன், கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், இன்று அவர் உடல்நலக்குறைவால் மதியம் 3 மணி அளவில் காலமானார். தந்தை செந்தமிழன் காலமான செய்தியை கேட்டு சீமான், சென்னையில் இருந்து சொந்த ஊரான அரணையூர் கிராமத்திற்கு புறப்பட்டு சென்றார். அங்கு, தந்தையின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதார்.  

Next Story

மேலும் செய்திகள்