கிடப்பில் உள்ள செம்மொழி தமிழ் விருதுகள்.. ரவிக்குமார் எம்.பி. கடிதம் மூலம் வலியுறுத்தல்

செம்மொழி தமிழ் விருதுகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம், எம்.பி. ரவிக்குமார் வேண்டுகோள்
கிடப்பில் உள்ள செம்மொழி தமிழ் விருதுகள்.. ரவிக்குமார் எம்.பி. கடிதம் மூலம் வலியுறுத்தல்
x
கிடப்பில் உள்ள செம்மொழி தமிழ் விருதுகள்.. ரவிக்குமார் எம்.பி. கடிதம் மூலம் வலியுறுத்தல்

செம்மொழி தமிழ் விருதுகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம், எம்.பி. ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில், தமிழறிஞர்களை பெருமைப்படுத்தும் விதமாக பல்வேறு விருதுகள் உருவாக்கப்பட்டன. குடியரசு தலைவரால் வழங்கப்படும் விருதுகளுடன், கருணாநிதியால் நிறுவப்பட்ட செம்மொழி தமிழ் அறக்கட்டளை மூலம் செம்மொழி தமிழ் விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில், ஆட்சி மாற்றத்தால் இந்த விருதுகள் முறையாக வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ள எம்.பி. ரவிக்குமார், நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக எடுத்துரைத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார். எனவே, தற்போது திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில், பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள குடியரசுத் தலைவர் விருதுகளை அறிவிப்பதற்கும், செம்மொழித் தமிழ் விருதுக்குத் தகுதியானவர்களைத் தேர்வு செய்வதற்கும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசை, வலியுறுத்தியுள்ளார். மேலும், கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி செம்மொழி தமிழ் விருது வழங்கப்பட வேண்டும் என்பதால், அதற்கு முன் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்