தன் தாய்க்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார் முதல்வர் ஸ்டாலின்...

முதல்வர் அன்னையர் தின வாழ்த்து... தன் தாய்க்கு முதல்வர் ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.
x
முதல்வர் அன்னையர் தின வாழ்த்து... தன் தாய்க்கு முதல்வர் ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.

அன்னையர் தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வர் ஸ்டாலின் தன் மனைவி துர்கா ஸ்டாலினுடன்  கோபாலபுரத்தில் உள்ள தன் தாயார் தயாளு அம்மாள் அவர்களை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள அவர், 'தாய்'மொழி, 'தாய்'நாடு என நம் வாழ்வின் எல்லா நிலையிலும் உயர்ந்து நிறைந்திருப்பவர் தாய் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அனைத்து தாய்மார்களுக்கும் அன்னையர் தின வாழ்த்து தெரிவித்த அவர், மகளிர் நலத்துடன், அன்னையர் நலனையும் தமிழக அரசு காக்கும் என்று தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்