ரெம்டெசிவர் மருந்தை விற்றால் நடவடிக்கை... சிறப்பு அதிகாரி பீலா ராஜேஷ் எச்சரிக்கை

ரெம்டெசிவர் மருந்தை கள்ளச் சந்தையில் விற்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கிருஷ்ணகிரி மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி பீலா ராஜேஷ் எச்சரித்தார்.
ரெம்டெசிவர் மருந்தை விற்றால் நடவடிக்கை... சிறப்பு அதிகாரி பீலா ராஜேஷ் எச்சரிக்கை
x
ரெம்டெசிவர் மருந்தை விற்றால் நடவடிக்கை... சிறப்பு அதிகாரி பீலா ராஜேஷ் எச்சரிக்கை 

ரெம்டெசிவர் மருந்தை கள்ளச் சந்தையில் விற்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கிருஷ்ணகிரி மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி பீலா ராஜேஷ் எச்சரித்தார். ஆக்சிஜன், தடுப்பூசி, பிபிஇ கிட் உள்ளிட்டவை குறித்து ஓசூர் அரசு மருத்துவமனையில் பீலா ராஜேஷ் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா உயிரிழப்புகளை தடுக்க  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். தடுப்பூசி செலுத்தும் பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பீலா ராஜேஷ், ரெம்டெசிவர் மருந்தை கள்ளச் சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்தார்.

Next Story

மேலும் செய்திகள்