தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு அதிகரிப்பு - மோடியுடன் ஸ்டாலின் பேசியதை தொடர்ந்து நடவடிக்கை

தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு தொடர்பாக, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.
x
தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு தொடர்பாக, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். இதைத் தொடர்ந்து, ஸ்டாலினுடன் தொலைபேசியில் மோடி பேசியபோதும் 500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். 
இந்நிலையில், தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 
220 மெட்ரிக் டன்னில் இருந்து 419 மெட்ரிக் டன்னாக மத்திய அரசு அதிகரித்துள்ளது. இந்த அறிவிப்பு குறித்த தகவலை, மத்திய சுகாதார அமைச்சக இயக்குநர் சஞ்சய் ராய் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்