செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகள் உயிரிழப்பு

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக 5 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
x
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக 5 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் தினசரி ஆயிரத்து 500க்கும் மேற்போட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு பத்து மணி முதல் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆக்சிஜன் கிடைக்காமல் சுமார் ஒரு மணி நேரத்துக்குள் அடுத்தடுத்து 5 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் மருத்துவமனையில் நேற்று நள்ளிரவில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 




Next Story

மேலும் செய்திகள்