கொரோனா - "மக்கள் இயக்கமாக மாற்றுவோம்" - திமுக தலைவர் ஸ்டாலின்

கொரோனா நோய் பரவல் தடுப்பை மக்கள் இயக்கமாக மாற்றிச் செயல்படுவோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
x
கொரோனா நோய் பரவல் தடுப்பை மக்கள் இயக்கமாக மாற்றிச் செயல்படுவோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளை, மக்கள் அனைவரும் கவனமாக  கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்,. ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவும் சங்கிலியைத் துண்டிக்காமல் கொரோனாவை ஒழிக்க முடியாது என்றும் அத்தகைய சங்கிலியைத் துண்டிக்கவே இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்,.  கட்டுப்பாடுகளை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றிச் செயல்பட்டால் மட்டுமே, நம் பாதுகாப்பை உறுதி செய்திட இயலும் என்றும் அவசர, அவசியம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியில் வருவதை அனைவரும் தவிர்க்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்,. பேருந்துப் போக்குவரத்தைக் கவனத்துடன் பயன்படுத்த வேண்டும் என்றும் கூட்டமாக நிற்பது, நெருங்கி நிற்பது ஆகியவற்றைத் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் எனவும் ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்,. அரசின் கட்டுப்பாடுகளை, அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளாக இல்லாமல் மக்கள் தங்களுக்குத் தாங்களே போட்டுக் கொள்ளும் கட்டுப்பாடுகளாக நினைக்க வேண்டும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்