தமிழகத்தில் முழு ஊரடங்கை அறிவிக்க கோரிக்கை/சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

தமிழகத்தில் முழு ஊரடங்கை அறிவிக்க கோரிக்கை/சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
x
தமிழகத்தில் முழு ஊரடங்கை அறிவிக்க கோரிக்கை/சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க முழு ஊரடங்கை அறிவிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சென்னை அமைந்தகரையை சேர்ந்த வழக்கறிஞர் பாலாஜிராம் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கொரோனா பரவலை தடுக்க, தமிழகத்தில் மேலும் 2 ஆயிரம் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவ பணியாளர்களை நியமிக்க வேண்டும் எனவும் மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.மேலும், செங்கல்பட்டில், 100 ஏக்கர் பரப்பில் மத்திய அரசால் 2012ல் துவங்கப்பட்ட ஒருங்கிணைந்த தடுப்பூசி நிறுவனத்தில் உற்பத்தியை துவங்க மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் முழு ஊரடங்கை அறிவிக்க வேண்டும் எனவும் மாநிலத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போக்குவரத்தை நிறுத்த வேண்டும் எனவும் அந்த மனுவில் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்