முதலமைச்சராகிறார் திமுக தலைவர் ஸ்டாலின் - வரும் 7ஆம் தேதி பதவி ஏற்பு விழா

தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது.
x
முதலமைச்சராகிறார் திமுக தலைவர் ஸ்டாலின் - வரும் 7ஆம் தேதி பதவி ஏற்பு விழா 

தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இந்நிலையில் நாளை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ள கூட்டத்தில் ஏக மனதாக ஸ்டாலின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். அதன் பிறகு ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து முதல்-அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடித்தை ஸ்டாலின் வழங்குகிறார். அப்போது எந்த தேதியில் பதவி ஏற்பது என்ற விவரம் வெளியிடப்படும். அனேகமாக வருகிற 7-ந் தேதி மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடத்தப்படும் என்றும் திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 
 

Next Story

மேலும் செய்திகள்