வாக்கு எண்ணிக்கை நடவடிக்கைகள் - வழிமுறைகளை பின்பற்ற கட்சிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை
பதிவு : ஏப்ரல் 30, 2021, 03:12 PM
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்காக தேர்தல் ஆணையம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து திருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், அவற்றை பின்பற்ற அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
வாக்கு எண்ணிக்கை நடவடிக்கைகள் - வழிமுறைகளை பின்பற்ற கட்சிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை 

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்காக தேர்தல் ஆணையம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து திருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், அவற்றை பின்பற்ற அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.தடுப்பூசி, ரெம்டெசிவர், ஆக்சிஜன் பற்றாக்குறைகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.இதேபோல், கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற உத்தரவிடக் கோரி அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு, கொரோனா பரவலுக்கு காரணம் தேர்தல் ஆணையம் தான் என கருத்து தெரிவித்திருந்தது.இந்நிலையில், இந்த வழக்குகள் மீண்டும் தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, விசாரணையின் போது நீதிபதிகள் தெரிவிக்கும் கருத்துக்களை வெளியிட ஊடகங்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும்,அதன் அடிப்படையில் தேர்தல் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய தடை விதிக்க வேண்டும் எனவும் கோரி, தேர்தல் ஆணையம் மனுத்தாக்கல் செய்தது.தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கைக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு சார்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.இது குறித்து திருப்தி தெரிவித்த நீதிபதிகள், மாநில அரசும், தேர்தல் ஆணையமும் பிறப்பித்துள்ள இந்த விதிகளை அரசியல் கட்சியினர், ஊடகத்தினர் கண்டிப்புடன் பின்பற்றி, ஒத்துழைப்பு வழங்க அறிவுறித்தினர்.தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்திய நீதிபதிகள்,அரசின் விதிமுறைகளை அதிகாரிகளும், காவல் துறையினரும் கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு, வழக்குகளின் விசாரணையை மே 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

பிற செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

33 views

16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் 11ம் தேதி தொடக்கம்

பதினாறாவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் மே 11ஆம் தேதி கூடும் என சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.

199 views

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

210 views

"நான் திராவிடன்"... ஸ்டாலின் கருத்து - அரசியல் பின்னணி என்ன?

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திமுக தலைவர் மு.க ஸ்டாலின், தனது டுவிட்டர் கணக்கில், தன்னை திராவிட இயக்கத்தை சேர்ந்தவர் என குறிப்பிட்டு உள்ளார். இதற்கான அரசியல் பின்னணி என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்....

417 views

தமிழகத்தில் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வரவேற்பு

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் வரவேற்றுள்ளார்

21 views

தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு : அன்புமணி ராமதாஸ் வரவேற்பு

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக,நாளை மறுநாள் முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதனை பா.ம.க. மூத்த தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்றுள்ளார்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.