கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் கூடாது - எதிர்ப்பு தெரிவித்து சு.ப.உதயகுமார் அறிக்கை

கூடங்குளத்தில் கூடுதலாக அணு உலைகளை கட்டக்கூடாது என்றும், கட்டுமான பணிகளை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்
கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் கூடாது - எதிர்ப்பு தெரிவித்து சு.ப.உதயகுமார் அறிக்கை
x
கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் கூடாது - எதிர்ப்பு தெரிவித்து சு.ப.உதயகுமார் அறிக்கை

கூடங்குளத்தில் கூடுதலாக அணு உலைகளை கட்டக்கூடாது என்றும், கட்டுமான பணிகளை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.நேற்றைய தினம் நெல்லை மற்றும் குமரி மாவட்ட கடலோர கிராமங்களில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டது.இந்நிலையில், இது தொடர்பாக அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சு.ப.உதயகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் கூடங்குளம் அணு உலைகள் நிலநடுக்கங்களை கணக்கில் எடுத்து கட்டப்பட்டவை அல்ல என்றும் இதனை இந்திய அணுசக்தி கழகத்தின் தலைவர் அனில் ககோட்கர் கடந்த 2003 ஆம் ஆண்டு ஒப்புக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.புகுஷிமா போன்றதொரு விபத்தை தாங்கி கொள்ளும் நிலையில் இந்தியா இல்லை என்பது தான் உண்மை என குறிப்பிட்ட அவர், கூடங்குளத்தில் கூடுதலாக அணு உலைகளை கட்டக்கூடாது என்றும், கட்டுமான பணிகளை உடனே நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துவதாக குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்