2017ல் நிலத்தை அபகரித்ததாக 8 பேர் மீது வழக்குப்பதிவு... குற்றம்சாட்டப்பட்டோரை கைது செய்யாதது ஏன் ? மாவட்ட எஸ்.பிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

x
2017ல் நிலத்தை அபகரித்ததாக 8 பேர் மீது வழக்குப்பதிவு... குற்றம்சாட்டப்பட்டோரை கைது செய்யாதது ஏன் ? மாவட்ட எஸ்.பிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி 

 நில அபகரிப்பு வழக்கில் முன்ஜாமீன் மனு தள்ளுபடியான நிலையில், குற்றம்சாட்டப்பட்டோரை கைது செய்யாதது ஏன் என செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காண்பாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.சென்னை அடுத்த காட்டாங்குளத்தூரில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் நரசிம்மனுக்கு சொந்தமான நிலத்தை அபகரித்து கட்டடம் கட்டியதாக வீரபத்திரன் உட்பட 8 பேர் மீது 2017ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் முன்ஜாமீன் கோரி 8 பேரும் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தனது நிலத்தில் உள்ள கட்டிடத்தை அகற்றக்கோரி நரசிம்மன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, செங்கல்பட்டு எஸ்பி பதில்மனு தாக்கல் செய்தார். அதில் குற்றம்சாட்டப்பட்டோர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளாததை சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ஏப்ரல் 30ம் தேதி காணொலி மூலம் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு எஸ்.பிக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்