சர்ச்சைக்குப் பிறகு தமிழில் வெளியான புதிய கல்விக் கொள்கை

புதிய கல்விக் கொள்கையின் மொழிபெயர்ப்பு தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சகம் அதனை தமிழில் வெளியிட்டது.
சர்ச்சைக்குப் பிறகு தமிழில் வெளியான புதிய கல்விக் கொள்கை
x
புதிய கல்விக் கொள்கையின் மொழிபெயர்ப்பு தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சகம் அதனை தமிழில் வெளியிட்டது. 

மத்திய அரசு சார்பில், கஸ்தூரி ரங்கன் கல்விக்குழு அளித்த பரிந்துரைகளின் படி, புதிய கல்விக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு, ஜூலை 29ம் தேதி இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதலும் அளித்தது. தொடக்கத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே, புதிய கல்விக் கொள்கை வெளியிடப்பட்ட நிலையில், பிற இந்திய மொழிகளிலும் மொழிபெயர்ப்புகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, 17 மொழிகளில் புதிய கல்விக் கொள்கையின் மொழி பெயர்ப்பு வெளியிடப்பட்டது. இதில், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகள் இடம்பெற்றிருந்த நிலையில், தமிழ் மொழி இடம்பெறாதது சர்ச்சைக்குள்ளானது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில், புதிய கல்வி கொள்கையின் தமிழ் மொழிபெயர்ப்பை, மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்