கனிம வளங்கள் கொள்ளை - குற்றச்சாட்டு... இரு மாவட்ட நிர்வாகத்திற்கு மக்கள் கோரிக்கை

கனிம வளங்கள் கொள்ளை - குற்றச்சாட்டு... இரு மாவட்ட நிர்வாகத்திற்கு மக்கள் கோரிக்கை
கனிம வளங்கள் கொள்ளை - குற்றச்சாட்டு... இரு மாவட்ட நிர்வாகத்திற்கு மக்கள் கோரிக்கை
x
கனிம வளங்கள் கொள்ளை - குற்றச்சாட்டு... இரு மாவட்ட நிர்வாகத்திற்கு மக்கள் கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கனிம வளங்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.திருப்பூர், கோவை மாவட்ட எல்லையான காமநாயக்கன்பாளையத்தை அடுத்துள்ளது கந்தம்பாளையம். இப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இருந்து, கடந்த சில நாட்களாக சட்டவிரோதமாக மணல் கடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது. மேலும் காமநாயக்கன்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் இருந்து எந்த வித அனுமதியும் பெறாமல் ஓடக்கல் வெட்டப்பட்டு கடத்தி வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது போன்று கனிம வளங்கள் கொள்ளை போவதை தடுத்து நிறுத்த இரு மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்