தொடர் இருசக்கர வாகன திருட்டு.. 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது

தொடர் இருசக்கர வாகன திருட்டு.. 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது
தொடர் இருசக்கர வாகன திருட்டு.. 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது
x
தொடர் இருசக்கர வாகன திருட்டு.. 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது
 
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டுவந்த 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குடியாத்தம் சுற்றுவட்டார பகுதியில், தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடுபோவதாக புகார் வந்தன. இந்நிலையில், கே.வி.குப்பம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். மூவரும், முன்னுக்குபின் முரணாக பேச சந்தேகமடைந்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது, மூவரும் இருசக்கர வாகன கொள்ளையர்கள் எனவும், தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கிடுக்குப்பிடி போட்ட போலீசார், 2 சிறுவர்கள் உட்பட விக்னேஷ், ரவி, சந்தோஷ் என்ற 6 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 7 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்