மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண நிகழ்வை காண பக்தர்களுக்கு அனுமதி

மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில், திருக்கல்யாண நிகழ்வை காண பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
x
மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில், திருக்கல்யாண நிகழ்வை காண பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வரும் 15ஆம் தேதி தொடங்கும் சித்திரை திருவிழா, 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், திருக்கல்யாணம் நடைபெறும் 24ஆம் தேதி, காலை 9.30 மணி முதல் 2.30 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற நாட்களில் சுவாமி புறப்பாடு நேரங்களை தவிர பத்கர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுவாமி புறப்பாடு காலங்களில், பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்