தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021... வாக்களித்த அரசியல் தலைவர்கள்
பதிவு : ஏப்ரல் 06, 2021, 10:41 PM
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021... வாக்களித்த அரசியல் தலைவர்கள்
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021... வாக்களித்த அரசியல் தலைவர்கள் 
 

தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தனது சொந்த ஊரில் வாக்களித்தார். தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில் உள்ள செவன்த்டே  நர்சரி பள்ளியில், ஓ.பன்னீர்செல்வம் தனது வாக்கினை பதிவு செய்தார். அவருடன் அவரது மகனும் எம்.பியுமான ரவீந்திரநாத் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் வாக்களித்தனர்.


பாமக நிறுவனர் ராமதாஸ் திண்டிவனத்தில் தனது வாக்கை பதிவு செய்தார். அங்குள்ள மரகதாம்பிகை ஆரம்பப்பள்ளியில் அமைத்துள்ள 104 வது வாக்குச்சாவடியில் தனது மனைவி சரஸ்வதி அம்மாள் மற்றும் குடும்பத்தினருடனும் அவர் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். 


விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ஓட்டு போட்டு தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். அரியலூர் மாவட்டம் குன்னம் தொகுதிக்கு உட்பட்ட அங்கனூர் வாக்குச்சாவடிக்கு வந்த அவர், மக்களோடு மக்களாக வரிசையில் நின்றிருந்தார். பின்னர், வாக்காளர் பட்டியலில் விவரம் சரிபார்த்த பிறகு, தனது வாக்கை திருமாவளவன் பதிவு செய்தார். 


தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கீழ்பாக்கம் பகுதியில் தனது வாக்கை பதிவு செய்தார். அங்குள்ள மாநகராட்சி உள்விளையாட்டு அரங்கில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் அவர் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சிதம்பரத்தில் வாக்களித்தார். தனது இல்லம் அருகே உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில், தனது மனைவியுடன் வந்து பாலகிருஷ்ணன் வாக்களித்தார்.


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தனது வாக்கினைப் பதிவு செய்தார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வேளூர் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் முத்தரசன் வாக்களித்தார். முன்னதாக வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், சிறிது நேரம் காத்திருந்து அவர் தனது, ஜனநாயக கடமையை ஆற்றினார். 


சென்னை மந்தைவெளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்ற ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்பு, ஓட்டு போடும் உரிமையை நிறைவேற்றினார். பின்னர் தனது தொகுதிக்கு உட்பட்ட நுங்கம்பாக்கம் வாக்குச்சாவடியில் குஷ்பு ஆய்வு மேற்கொண்டார். 
 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

5186 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

663 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

273 views

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

149 views

பிற செய்திகள்

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு அதிகரிப்பு... மத்திய அரசே பொறுப்பு - ராகுல் காந்தி

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு அதிகரிப்பு... மத்திய அரசே பொறுப்பு - ராகுல் காந்தி

1 views

தபால் வாக்குகள் எண்ணுவதற்கான நடைமுறையை மே 2 ஆம் தேதிதான் தொடங்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார் மனு

தபால் வாக்குகள் எண்ணுவதற்கான நடைமுறையை வாக்கு எண்ணும் நாளான மே 2 ஆம் தேதிதான் தொடங்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

85 views

"உயிர்களைப் பறிக்கும் அதிவேக சூப்பர் பைக்" - தடை விதிக்க ராமதாஸ் கோரிக்கை

அதிவேக சூப்பர் பைக்குகளை தடை செய்ய வேண்டும் என ப.ம.க. நிறுவனர் ராமதாஸ் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

37 views

வெளி மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஏற்றுமதி - மத்திய அரசு செயலுக்கு டி.டி.வி. தினகரன் கண்டனம்

வெளி மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஏற்றுமதி - மத்திய அரசு செயலுக்கு டி.டி.வி. தினகரன் கண்டனம்

73 views

"தடுப்பூசி ஏற்றுமதி செய்வது குற்றச்செயல்" - காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி குற்றச்சாட்டு

"தடுப்பூசி ஏற்றுமதி செய்வது குற்றச்செயல்" - காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி குற்றச்சாட்டு

51 views

"மாநில அரசுகளுக்கும், ரூ.150 -ல் தடுப்பூசி" - மத்திய அரசுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

"மாநில அரசுகளுக்கும், ரூ.150 -ல் தடுப்பூசி" - மத்திய அரசுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

65 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.