திமுக தேர்தல் அறிக்கை- அவதூறாக பேசி வீடியோ... பெண் மீது போலீஸார் வழக்குப்பதிவு

திமுக தேர்தல் அறிக்கை குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திமுக தேர்தல் அறிக்கை- அவதூறாக பேசி வீடியோ... பெண் மீது போலீஸார் வழக்குப்பதிவு
x
திமுக தேர்தல் அறிக்கை குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.திமுக தேர்தல் அறிக்கையில் சாதி மறுப்பு திருமணம் தொடர்பாக அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அது குறித்து தவறான நோக்கத்துடன் ஜாதி மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசி பெண் ஒருவர் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, உடனடியாக சமூக வலைத்தளத்தில் இருந்து அந்த வீடியோ நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து  சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் போலீசார் 153ஏ என்ற சட்டப் பிரிவின் கீழ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், வீடியோ வெளியிட்ட பெண் விரைவில் கைது செய்யப்படுவார் என காவல்துறை தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்