கருணாநிதி வென்ற தொகுதியில் களம் காணும் உதயநிதி - வெற்றி வாய்ப்பு எப்படி?

கருணாநிதி வென்ற தொகுதியில் களம் காணும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?
கருணாநிதி வென்ற தொகுதியில் களம் காணும் உதயநிதி - வெற்றி வாய்ப்பு எப்படி?
x
கருணாநிதி வென்ற தொகுதியில் களம் காணும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? களத்தில் யார் யார்? கடும் போட்டி இருக்குமா ? என்பதை அலசுகிறது இந்த தொகுப்பு...

கதை, வசனகர்த்தாவாக கலையுலகில் முத்திரை பதித்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வழியில், தனது தந்தை ஸ்டாலினைப் போலவே திரையுலகில் கதாநாயகனாக கால்பதித்தவர் உதயநிதி.

ரையில் தோன்றினாலே காமெடியனைக் கலாய்த்து ரசிகர்களை
கலகலப்பூட்டினார்.

முகம் தெரிந்த நடிகராக மக்களால் அங்கீகரிக்கப்பட்டவருக்கு தேர்தலில் சீட் கொடுத்து, வாய்ப்பை வழங்கியிருக்கிறது, திமுக தலைமை.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியை பொறுத்தவரை திமுகவுக்கு செல்வாக்கான தொகுதிகளுள் ஒன்று.

குறிப்பாக, 1996 முதல் 3 முறை சேப்பாக்கம் தொகுதியில் தொடர்ச்சியாக வெற்றிபெற்று, அதில் 2 முறை கருணாநிதி முதலமைச்சராகவும் ஆனவர் என்பதால் திமுகவினரின் நம்பிக்கைக்குரிய தொகுதியாக விளங்குகிறது.

தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு, 2011 ல் திருவல்லிக்கேணி தொகுதியின் சில பகுதிகளை இணைத்து, "சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியாக" உருமாற்றம் பெற்றது.

2016 தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வான ஜெ. அன்பழகன் மறைந்துவிட்ட நிலையில் தற்போது
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி களமிறக்கப்பட்டிருக்கிறார்.

மிகவும் சிறிய தொகுதி என்பதால் பிரசாரத்தை முடித்துக்கொண்டு தமிழகம் முழுவதும் கவனம் செலுத்தலாம் என்பதாலேயே உதயநிதி இத்தொகுதியை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.

எதிர் தரப்பில் அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளராக கஸ்ஸாலி நிறுத்தப்பட்டிருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்