திமுக, மதிமுக நிர்வாகிகள் வீடுகளில் சோதனை... ஆறு மூட்டைகளில் சிக்கிய ஆவணங்கள்

தாராபுரம் தொகுதியில் திமுக மதிமுக நிர்வாகிகள் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
திமுக, மதிமுக நிர்வாகிகள் வீடுகளில் சோதனை... ஆறு மூட்டைகளில் சிக்கிய ஆவணங்கள்
x
தாராபுரம் தொகுதியில் திமுக மதிமுக நிர்வாகிகள் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் பாஜக மாநில தலைவர் எல். முருகன் போட்டியிடுகிறார். இந்நிலையில்,  நேற்று மாலை திமுக நகர செயலாளர் தனசேகர் வீட்டிலும் அலங்கியம் சாலையிலுள்ள மதிமுக மாவட்ட துணை செயலாளர் கவின் நாகராஜ் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று மாலை சோதனை நடத்தினர். ஐந்து பேர் கொண்ட குழுக்களாக பிரிந்து நடத்திய இந்த சோதனை இரவு சுமார் 11 மணி வரை நீடித்தது. இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திமுகவினர் அதிக அளவில் அங்கு கூடிய நிலையில், இருவர் வீடுகளிலும் நடத்திய சோதனையின்போது கைப்பற்றிய ஆவணங்களை ஆறு மூட்டைகளாக வருமான வரித்துறை அதிகாரிகள் கட்டி காரில் ஏற்றிச் சென்றனர். இதனால் தாராபுரம் நகர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
 

Next Story

மேலும் செய்திகள்