காடையாம்பட்டி ஆட்டு சந்தை - திருவிழா என்பதால் விற்பனை அமோகம்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காடையாம்பட்டி ஆட்டு சந்தையில், நல்ல விலைக்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
காடையாம்பட்டி ஆட்டு சந்தை - திருவிழா என்பதால் விற்பனை அமோகம்
x
 சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காடையாம்பட்டி ஆட்டு சந்தையில், நல்ல விலைக்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். காடையாம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் கோயில் திருவிழா என்பதால், வழக்கத்துக்கு மாறாக சந்தை களைகட்டியது. சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெள்ளாடு, பல்லையாடு, குறும்பாடு, செம்மறியாடு ஆகிய ஆட்டினங்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. இவ்வற்றில் பண்டிகை காலம் என்பதால், செம்மறியாடு, வெள்ளாடுகள் அதிகளவில் விற்பனையானதால், வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்


Next Story

மேலும் செய்திகள்