ஆர்.எஸ். பாரதி மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு
பதிவு : பிப்ரவரி 27, 2021, 05:32 PM
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மீதான வன்கொடுமை தடை சட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பட்டியலின மக்களை அவமதித்ததாக கூறி அளிக்கப்பட்ட புகாரின் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு குறித்து சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் இருக்கும் நிலையில், வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி ஆர்.எஸ். பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிபதி சதிஷ்குமார் முன்பு நடைபெற்ற போது, அரசியல் காரணங்களுக்காக உள்நோக்கத்துடன் வழக்கு போடப்பட்டுள்ளது என்றும் பட்டியலின மக்களை புண்படுத்தும் விதமாக பேசவில்லை என்றும் ஆர்.எஸ். பாரதி தரப்பில் வாதிடப்பட்டது.  புகார் தாரர் தரப்பில் வாதிடுகையில், ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு மக்களை பிளவுபடுத்தும் வகையிலும், நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும் இருந்ததாக கூறப்பட்டது. இவ்வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சதிஷ்குமார், ஆர்.எஸ்.பாரதி மீதான வன்கொடுமை தடை சட்ட வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டார்.மேலும், வழக்கை ரத்து செய்ய கோரிய ஆர்.எஸ்.பாரதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.வழக்கு விசாரணையை தினமும் நடத்தி தாமதமின்றி முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார்.  
மேலும் அறிவுப்பூர்வமான விவாதங்களை நடத்தாமல், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்கள், எதிர்தரப்பினர் மீது விஷத்தை கக்குவது வழக்கமாகி விட்டதாகவும் கருத்து தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

50 views

பிற செய்திகள்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஒரு டன் பழங்களால் விநாயகருக்கு அலங்காரம்

கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஒரு டன் எடை கொண்ட பழங்களால் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

50 views

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

52 views

சூறாவளி காற்றுடன் பெய்த மழை - மின்கம்பங்கள், மேற்கூரைகள் சேதம்

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சூறாவளி காற்றுடன் பெய்த மழையால், மின்கம்பங்கள், வீட்டின் மேற்கூரைகள் சேதம் அடைந்தன.

10 views

பெற்ற மகன்களை நரபலி கொடுக்க முயன்ற தாய் - தாயின் தன்பாலின ஈர்ப்பால் விபரீதம்

ஈரோடு அருகே பெற்ற மகன்களையே, தாய் நரபலி கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

200 views

அம்பேத்கரின் 130-வது பிறந்த நாள் - ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

சட்டமேதை அம்பேத்கரின் 130 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

14 views

ஆட்டோ: கார் நேருக்கு நேர் மோதல் - சிறுவன் உட்பட இருவர் உயிரிழப்பு

தேனி மாவட்டம், போடி அருகே நிகழ்ந்த கொடூர விபத்தில் சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.