சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம்...
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சூடுபிடித்துள்ளது...
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சூடுபிடித்துள்ளது...
இன்று காலையில், முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்தித்து, பாஜக தொகுதி பங்கீடு குழு ஆலோசனை நடத்தியது....
இதில் பாஜக 30 தொகுதிகள் வரை கேட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது..
மேலும், பாமக வைத்த இடஒதுக்கீடு கோரிக்கையை அதிமுக அரசு நிறைவேற்றிய நிலையில், இன்று நடக்க உள்ள பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு உறுதியாகலாம் என தெரிகிறது.
அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவும் விரைவில் தொகுதி பங்கீடு பேச்ச்சுவார்த்தையை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதே போன்று, கூட்டணியில் உள்ள காங்கிரசுடன் சில தினங்களுக்கு முன்பு, திமுக தொகுதி பங்கீடு குறித்து முதல்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியது.
தற்போது, கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை திமுக அமைத்துள்ளது...
இதனிடையே அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய சமத்துவ மக்கள் கட்சியும், திமுகவில் இருந்து வெளியேறிய இந்திய ஜனநாயக கட்சியும் இணைந்து மாற்றத்திற்கான புதிய அணி என்ற ஒரு அணியை உருவாக்கியுள்ளது..
இந்த அணி சார்பில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை இன்று சந்தித்து பேசியுள்ளார் சரத்குமார்..
தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தனித்து போட்டியிடுமா? அல்லது மூன்றாவது அணியில் இடம்பெறுமா? என்றும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...
Next Story