மாடு முட்டியதில் இரண்டு பேர் இறப்பு - மஞ்சு விரட்டு போட்டியின் இறுதியில் சோகம்

திருமயம் அருகே நடந்த மஞ்சு விரட்டு போட்டியில் மாடு முட்டியதில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாடு முட்டியதில் இரண்டு பேர் இறப்பு - மஞ்சு விரட்டு போட்டியின் இறுதியில் சோகம்
x
திருமயம் அருகே நடந்த மஞ்சு விரட்டு போட்டியில் மாடு முட்டியதில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே கல்லூர் கிராமம் உள்ளது. இங்குள்ள அரியநாச்சி அம்மன் செம்முனீஸ்வரர் ஆலய திருவிழாவில் மஞ்சுவிரட்டு போட்டி நடத்தப்பட்டது. திடலில் ஆங்காங்கே அவிழ்த்துவிடப்பட்டதால் காளைகள் நான்கு திசைகளிலும் தெறித்து ஓடின. மாடுகளை பிடிக்க சென்ற அசார் என்ற இளைஞர் மீது மாடு முட்டியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பார்வையாளராக பங்கேற்ற முதியவர் ராசு என்பவர் மீதும் மாடு முட்டி காயமடைந்தார். இவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மஞ்சு விரட்டு போட்டியில் காயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர், அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆரவாரத்தோடு பார்வையாளர்களின் கைதட்டல், கரகோஷங்களுடன் ஆரம்பித்த மஞ்சு விரட்டு போட்டி, இறுதியில் இருவரின் உயிரிழப்பால் சோகத்துடன் முடிவு பெற்றது. 

Next Story

மேலும் செய்திகள்