பட்டாசு ஆலை வெடி விபத்து-19பேர் பலி...மருத்துவமனைக்கு படையெடுக்கும் உறவினர்கள்

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்களுக்கு சிவகாசி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற்று வரும் நிலையில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பட்டாசு ஆலை வெடி விபத்து-19பேர் பலி...மருத்துவமனைக்கு படையெடுக்கும் உறவினர்கள்
x
பட்டாசு ஆலை வெடி விபத்து-19பேர் பலி...மருத்துவமனைக்கு படையெடுக்கும் உறவினர்கள் - போலீசார் குவிப்பு-நீடிக்கும் பதட்டம்

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்களுக்கு சிவகாசி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற்று வரும் நிலையில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.சாத்தூர் அருகே அச்சன் குளத்தில் நடைபெற்ற பட்டாசு ஆலை வெடி விபத்தில்  3 பெண்கள் உட்பட 19 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்,. படுகாயம் அடைந்த 3 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,. இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது  பிரேத பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது,. இதனைத்தொடர்ந்து உயிரிழந்த தொழிலாளர்களின் உறவினர்கள் கிராமப் பகுதியில் இருந்து சிவகாசி அரசு மருத்துவமனைக்கு படையெடுத்து வருவதாக கூறப்படுகிறது,.  இதனால் சிவகாசி நகரின் முக்கிய சாலைகள் மற்றும் சிவகாசி அரசு மருத்துவமனை வளாகம் முழுவதும் பாதுகாப்புக்காக நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்

பட்டாசு ஆலை விபத்து - 19 பேர் பலி... பிரேத பரிசோதனைக்கு பின் உடல்கள் ஒப்படைப்பு

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த அச்சன் குளத்தில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. சாத்தூர், சிவகாசி மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளில் பிரேதப் பரிசோதனை நடைபெற்றது.  

பட்டாசு ஆலையில் வெடி விபத்து.... தொழிலாளி ஒருவர் படுகாயம்

சிவகாசி அருகே மீண்டும் ஒரு பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில், தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படை வீரகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். காக்கிவாடன்பட்டியில் ராஜ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், சுரேஷ் என்ற தொழிலாளி படுகாயமடைந்த நிலையில், ஏனைய தொழிலாளிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் சிவகாசி ஆட்சியர் தினேஷ் குமார் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.


சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து : "பாதுகாப்பை எப்போது உறுதி செய்யப் போகிறோம்"... ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் கேள்வி

தொழிலாளர்களின் பாதுகாப்பை நாம் எப்போது உறுதி செய்யப்போகிறோம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். சாத்தூர் வெடி விபத்து தொடர்பாக டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், அன்றாடம் செத்துப் பிழைக்கும் தொழிலாக பட்டாசுத் தொழிலாளர்களின் வாழ்வு இருப்பதாக தெரிவித்துள்ளார். தற்போது 19 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலரும் மருத்துவமனையில் போராடி வருவதாக குறிப்பிட்டுள்ளார். இறந்தவர்களின் ஓலம் தேர்தல் பிரசார இரைச்சலில் அடங்கிவிடக் கூடாது என்றும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கமல் வலியுறுத்தியுள்ளார். 

பட்டாசு ஆலை வெடி விபத்து : ட்விட்டரில் சீமான் இரங்கல் பதிவு

பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானோருக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அதிகாரிகளின் அலட்சியப்போக்கும், அரசின்மெத்தனமும் தான் இத்தனை உயிர்கள் பலியாக காரணம் என்று தெரிவித்தார். மேலும், பட்டாசுக் கடைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேன்டும் என்றும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும் என்றும் கூறிய அவர், அப்பகுதி மக்களுக்கு மாற்றுத்தொழிலை அரசு விரைந்து செய்து தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.






Next Story

மேலும் செய்திகள்