கொடிகட்டிப் பறக்கும் ஆன்லைன் சூதாட்டம்
பதிவு : ஜனவரி 23, 2021, 12:10 PM
சென்னையில் மீண்டும் ஒரு ஆன்லைன் சூதாட்ட சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அதைப்பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...
சென்னையில் மீண்டும் ஒரு ஆன்லைன் சூதாட்ட சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அதைப்பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...சென்னை தியாகராயநகரில் வசித்து வருபவர் ஜித்து... வட மாநிலத்தை சேர்ந்த இவர், அடிக்கடி ஹூக்கா பார்களுக்கு செல்லும் பழக்கம் உடையவர் என்று கூறப்படுகிறது.அவ்வாறு அங்கு செல்லும்போது, சுரேஷ் என்பவரின் நட்பு இவருக்கு கிடைத்துள்ளது. பழக்கத்தை தொடர ஆன்லைன் சூதாட்டத்தை ஜித்துவுக்கு, சுரேஷ்  அறிமுகம் செய்து வைத்துள்ளார்.இதனைத் தொடந்து, கிரிக்கெட், டென்னிஸ் போன்ற விளையாட்டு போட்டிகளிலும், தங்கத்தின் விலையேற்ற இறக்கத்துக்கும் பந்தயம் கட்டி விளையாடி வந்துள்ளார் ஜித்து....நாளடைவில் சூதாட்ட விளையாட்டு, வழக்கம்போல், விபரீதத்தில் முடிந்துள்ளது.பல லட்சம் ரூபாயை இழந்துவிட்டதாக ஜித்து போலீசில் புகார் அளித்த நிலையில், அமைந்தகரை போலீசார் முதற்கட்ட விசாரணையை நடத்தினர்.ஜித்துவின் நண்பர் சுரேசை போலீசார் விசாரித்தபோது, lotus book 237 என்ற பிரத்யேக இணைய தளம் வாயிலாக சூதாட்டம் அரங்கேறியது கண்டறியப்பட்டு உள்ளது.அந்த இணையதளத்தில் உள்ளே சென்று உறுப்பினராக வேண்டும் என்றாலே, லட்சங்களை கொட்ட வேண்டும் என்பதும் தெரிய வந்துள்ளது.இது மட்டுமின்றி, சென்னை முழுவதும் ஏராளமான வி.வி.ஐ.பி-கள் மற்றும் தங்க வியாபாரிகளும், இந்த இணையதளத்தை பயன்படுத்தி சூதாடி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.இது தொடர்பான வழக்கு விசாரணை தற்போது, சைபர் க்ரைம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், விரிவான விசாரணையில், இன்னும் பல தகவல்கள் வெளிச்சத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

404 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

230 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

65 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

52 views

பிற செய்திகள்

சமுதாயத்தில் நிரூபிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது - மருத்துவ மாணவர்களிடம் பிரதமர் பேச்சு

இந்திய சுகாதார கட்டமைப்பு புதிய கண்ணோட்டத்துடனும், நம்பகத்தன்மையுடன் விளங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

128 views

விவசாயிகள் நகைக்கடன் மற்றும் சுய உதவி குழு கடன் தள்ளுபடி- முதலமைச்சர்

கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய நகைக்கடன் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

306 views

உணவகத்துக்குள் நுழைந்து அத்துமீறல் - மாமுல் தரக்கோரி மர்ம கும்பல் அட்டூழியம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள உணவகத்துக்குள் நுழைந்த நபர்கள், மாமூல் கேட்டு பொருட்களை சூறையாடிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

41 views

"வாங்க மோடி... வணக்கங்க மோடி..." கோவை வந்த மோடியை வரவேற்ற பாஜகவின் பாடல்

"வாங்க மோடி... வணக்கங்க மோடி..." கோவை வந்த மோடியை வரவேற்ற பாஜகவின் பாடல்

36 views

கவலையில் மூழ்க வைத்த மழை... விவசாயிகளின் போதாத காலம்!

அடுத்தடுத்த மழை பாதிப்புகளால் மீண்டு வர முடியாமல் கடலூர் மாவட்ட விவசாயிகள் தவித்து வருகின்றனர். அவர்களின் பரிதவிப்பை விளக்கும் செய்தித் தொகுப்பை பார்க்கலாம்...

46 views

ரூ.12,400 மதிப்பு திட்டங்களுக்கு அடிக்கல்

நெய்வேலியில் 2 அனல் மின் நிலையங்கள், மதுரை, திருப்பூரில் அடுக்குமாடி குடியிருப்புகள் என பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

94 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.